--- --:--:-- --

பொன்முடி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!

4

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து மறு ஆய்வு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

 

1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீதும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி வழக்கு பதிவு செய்தார்.

 

அதிமுக ஆட்சி காலத்தில் 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

 

இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு விசாரணைக்கு எடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி விசாரித்தார்.

 

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை பொன்மொழி அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியது சட்டவிரோதமானது என்பதாலும் நீதித்துறையை மதிப்பிழக்க செய்யும் முயற்சி என்பதாலும் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளதாக நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon