--- --:--:-- --

குறுவை சாகுபடி பாதிப்பு – முதலமைச்சர் இன்று ஆலோசனை

3

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை சென்றடைவதால் தான் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறியிருந்த நிலையில் வேளாண் துறை அதிகாரிகள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

குறிப்பாக நாகை மாவட்டத்தில் வேளாண் துறை அதிகாரி நடராஜன் அதே போல திருவாரூர் மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தின் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

இதில் குறுவை பயிர் சாகுபடி பாதிப்புகள் மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

 

இதனிடையே சம்பா சாகுபடிக்கு தயாராகும் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon