--- --:--:-- --

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் இன்று விசாரணை..!

2

செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஜாமீன் கோரியதாகவும் ஒன்றாக விசாரிக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

 

அவர் தொடர்பான வழக்குகள் முதலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டது.

 

இதற்கு காரணம் தெரிவித்த உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி அமலாக்க துறையின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் செந்தில் பாலாஜி மனுவும் விசாரிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

Right Menu Icon