மாமன், மருமகன் செய்த காரியம்.. சிக்கிய அரசு அதிகாரிகள்.. மகள் கைது..!
கொடைக்கானல் பகுதியில் நில மோசடி செய்த வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் கார்மெண்ட் ரிப்போ பகுதியில் சங்கரலிங்கம் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் சேர்ந்து கடந்த 1972 ஆம் ஆண்டு ஸ்மார்ட் 98 சென்ட் நிலம் வாங்கியுள்ளனர்.
இதே பெயர் கொண்ட நாயுடு பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மருமகன் சந்திரசேகர் இந்த நிலத்தை அபகரிக்க நினைத்தனர். அதன் பொருட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு 98 சென்ட் நிலத்திற்கான பட்டாக்களை தொலைந்து விட்டதாக கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்து தினசரி நாளிதழிலும் அறிவிப்பாக வெளியிட்டனர்.
தனது மகள் சாந்தி என்பவருக்கு நிலமானது பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உண்மை வெளியே வரவே சாந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பத்திர எழுத்தர், அப்போதைய சார்பதிவாளர், வழக்கறிஞர் உட்பட 11 பேரும் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.





