--- --:--:-- --

உதயநிதியின் பேச்சுக்கு சேகர்பாபு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? நிதி அமைச்சர் கேள்வி

2

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது அதற்கு மேடையில் இருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு வங்கி அரசியலுக்காகவே சனாதன தர்மத்தை அமைச்சர் உதயநிதி இழிவாக பேசியுள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஏற்கனவே பேட்டி ஒன்றில் சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நிர்மலா சீதாராமன் அது தொடர்பான பல காட்சிகளையும் இணைத்துள்ளார்.

 

காங்கிரஸ் கட்சி திமுகவுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ளாவிட்டால் அந்த கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்பது நிரூபணம் ஆகும் என அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் ராகுல் காந்திக்கு ஒரு சோதனை என்றும் சனாதனத்தை ஆதரிக்கிறாரா அல்லது எதிரிக்கிறாரா என்பது இதிலிருந்து தெரியவரும் எனவும் அசாம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

உதயநிதியின் பேச்சு தேச துரோகத்திற்கு இணையானது எனவும் இதற்காக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon