ஜி7 உச்சி மாநாடு – இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு!
காஷ்மீர் விவகாரத்தில் வேறு எந்த நாடும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்பு பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டில் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. சிறப்பு அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார்.
மாநாட்டின் இடையே பிரதமர் மோடி அமெரிக்க அதிபரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மோடியுடன் பேசியதாகவும், காஷ்மீர் விவகாரம் தனது மூன்று காட்டியிருப்பதாக மோடி கருதுவதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் நாடுகளின் விவகாரங்களில் அனைத்து வேறுபாடுகளையும் விரைவில் பேசி தீர்த்துக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

மேலும் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் இடையே நட்புறவை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி இந்தியா பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினைகளும் இரு நாட்டுக்கும் இடையே ஆனது. என்றும் எந்த மூன்றாவது நாட்டுக்கும் வலியை தர விரும்பவில்லை எனவும் கூறினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் 1947 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ஒன்றாகவே இருந்ததாகவும், இடையேயான பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தில் பிறநாடுகளில் நிலை குறித்து கவலை இல்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அப்போது பேசிய மோடி நன்றாக ஆங்கிலம் பேச தெரியும் , எனினும் அவர் ஆங்கிலத்தில் பேச விரும்பவில்லை எனவும் நகைச்சுவையாக தெரிவித்தார்.





