--- --:--:-- --

தேசிய கொடிக்கு பதில் கருப்பு கொடி ஏற்றியதால் பரபரப்பு..!

8

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் பசுமை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு தங்களது பிள்ளைகளை அனுப்பாமல் புறக்கணித்தனர்.

 

மேலும் கிராமம் முழுவதும் தெருக்களில் கருப்புக்கொடி தோரணம் கட்டி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் புறக்கணித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon