--- --:--:-- --

சொந்த வீட்டு கனவை நினைவாக்க புதிய திட்டம் பிரதமர் அறிவிப்பு..!

2

மக்களவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு தரப்பு வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்தது. பிரதமரின் சுதந்திர தின உரை பலதரப்பட்ட வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.

 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒளிமயமான எதிர்காலம் உருவாக்கும் என பிரதமர் தனது உரையில் கூறியிருந்தார். தச்சர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள் போன்ற திறன் சார்ந்த பாரம்பரிய பணிகளில் ஈடுபட்டு இருப்போருக்கு உதவும் வகையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மாதம் மாதம் 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

 

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, மக்களை கவரும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. நகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வங்கி கடன் சலுகை வகையில் இந்த திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15,000 பெண்கள் சுய உதவி குழுவினர் மூலம் விவசாயத்துறையில் பயன்படுத்தும் சேவையை வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

 

கிராமப்புறங்களில் உள்ள பெண்களை தொழில் முனைவோர் ஆக்கி அவர்களில் இரண்டு கோடி பேரையாவது லக்ஷாதிபதிகளாக மாற்றுவது தன் கனவு எனவும் குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon