--- --:--:-- --

காலை உணவு திட்டம் ஆகஸ்ட் 25 முதல் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!

1

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

வரும் கல்வியாக முதல் 15 லட்சத்தில் 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் கால உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும் என கூறினார்.

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில் இந்த மாதம் 25ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் கூறினார். மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து வசதி திட்டம், இனி விடியல் பயணத் திட்டம் என்ற புதிய பெயரில் அழைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

 

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 314 கோடி முறை கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணித்திருப்பதாக பெருமையுடன் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon