போலி முகநூல் கணக்கு தொடங்கி ஆபாசமாக பதிவிட்ட நபர் கைது..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பல்வேறு பெண்களின் புகைப்படங்களை கொண்டு போலி முகநூல் கணக்கு தொடங்கி ஆபாசமாக பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேட்டூர் பகுதியில் சேர்ந்த பெண்கள் சிலரின் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் ஆபாசமாக பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அங்குள்ள இளைஞர்களுக்கு அந்த புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முருகேசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து காவல் நிலையம் முன்பு திரண்ட பொதுமக்கள் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





