--- --:--:-- --

கணவனை சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி..!

10

துரை திருமங்கலம் அருகே மது போதையில் தகராறு செய்த கணவனை செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனியார் நிறுவன ஊழியர் காளிதாஸ் கடந்த 2ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர். காளிதாசன் மனைவி ஜெயாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

 

அவர் தினமும் மது அருந்தி காளிதாஸ் தன்னுடன் தகராறு செய்ததாகவும் கடந்த இரண்டாம் தேதி தகராறில் ஈடுபட்ட பொழுது ஆத்திரத்தில் சார்ஜர் ஒயரைக் கொண்டு கணவனின் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரிய வந்திருக்கிறது.

 

மேலும் தனது குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் அப்பா தற்கொலை செய்து கொண்டதாக கூறியதும் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon