அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.. பிரதமர் மோடி உட்பட 10,000 பேருக்கு அழைப்பு..!
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பிரதமர் மோடி உட்பட பத்தாயிரம் பிரமுகர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவிலை கட்டியவரும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி 15 முதல் 24ஆம் தேதி வரை நடக்கமுள்ள கும்பாபிஷேக விழாவிலும் நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கானோர் அயோத்தியில் குடி பெயர்வார்கள் என்பதால் அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு குறிப்பிட்டு அளவுக்கு மேல் கூட்டத்தை அனுமதிக்க கூடாது என அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே ஜனநாயக கட்டுமானத்தை முடிப்பதற்காக 24 மணி நேரமும் பணி நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





