டெல்லி வெள்ள நிலவரம் குறித்து அமித்ஷாவுடன் பிரதமர் மோடி பேச்சு..!
டெல்லி, ஹிமாச்சலில் வெள்ள நிலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருடன் பிரதமர் மோடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு இடங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மத்தியரசு தலையிட டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பு மற்றும் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.






