வளைவில் வேகம்.. திறந்த பஸ் கதவு.. மாணவருக்கு நேர்ந்த துயரம்..!
கேரள மாநிலம் மலப்புரத்தில் வளைவில் வேகமாக திரும்பிய பேருந்து ஒன்று பின்பக்க கதவு திறக்கவே உள்ளே பயணித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான்.
தற்பொழுது அந்த மாணவன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது.






