முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்..!
மெக்சிகோ நாட்டில் பழங்கால நம்பிக்கையின் படி இயற்கையின் அருளை பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக திருமணம் செய்து கொண்டார்.
மெக்சிகோவின் அருகே அமைந்துள்ள மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை தீவிரமாக கடைபிடித்து வருகிறார்கள்.
இயற்கையின் பிரதிநிதியாக முதலையே கருதும் அவர்கள் அதனுடன் மனிதனுக்கு திருமணம் செய்து வைத்தால் இயற்கை வளங்கள் பெருகும் என பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அதன்படி ஏழு வயது உடலை குட்டி ஒன்றை இளவரசியாக பாவித்து அதற்கு திருமண ஆடை அணிவித்து மேயர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட முதலைக்கு அவர் முத்தமும் இட்டார்.
மேல தாளங்கள் முழங்க அந்த முதலையை மக்கள் கிராம சாலைகளில் ஊர்வலமாக தூக்கி சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





