--- --:--:-- --

அமலா பாலுடன் முத்தக்காட்சி.. 20 முறை டேக் எடுத்தேன்..!

11.1

கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர் அமலா பால். இதையடுத்து அமலா பால், பிரபுசாலமன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் வெளிவந்த மைனா படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் தம்பி ராமையாக முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விதார்த் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், மைனா படத்தில் ஒரு பாடல் காட்சியில் அமலா பால் முகத்திற்கு நெருக்கமாக சென்று முத்தமிடாமல் விலகுவது போல ஒரு காட்சி எடுக்கப்பட்டது.

 

அந்த சமயத்தில் எனக்கு கூச்சமாக இருந்ததால் அமலாபாலின் முகத்திற்கு நெருக்கமாக செல்ல பயந்தேன். இதனால் இந்த காட்சியை எடுக்க 20 முறை டேக் வாங்கினேன் என்று விதார்த் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon