குறி வைத்து பித்தளை பொருட்கள் திருட்டு.. 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் மற்றும் வீதிகளில் பித்தளை பொருட்களை குறி வைத்து பல திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடாச்சிபுரம் தாலுகாக்கு உட்பட்ட வி.குப்பம் கிராமத்தில் உள்ள கோயில் மற்றும் சில வீடுகளில் பித்தளை பொருட்கள் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது விசாரணையின் மூலமாக தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான பித்தளை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





