--- --:--:-- --

தலைக்கேறிய கஞ்சா போதை.. வீட்டிற்குள் புகுந்து ரகளை..!

6

காஞ்சிபுரம் அருகே கஞ்சா போதையில் கையில் பட்டாகத்தியுடன் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழந்தைகளை மிரட்டி பொருட்களை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஏகாம்பேட்டை பகுதியில் கஞ்சா பகுதியில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் திடீரென திறந்திருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து குழந்தைகள் பயந்து போய் வெளியே வந்து தாய் கலைவாணியிடம் தெரிவித்தனர்.

 

இதையடுத்து வீட்டை வெளிப்பக்கமாக கலைவாணி பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்தார். தன்னை வீட்டிற்குள் வைத்து பூட்டியதால் ஆத்திரமடைந்தவர் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

 

அங்கு வந்த போலீசார் வீட்டுக்குள் இருந்தவனை அழைத்து வெளியே வரவில்லை. இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று போதையில் மயங்கி கிடந்த அஜித்தை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon