இளைஞரை 3 மணி நேரம் கட்டி வைத்து அடித்த போதை ஆசாமி..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அப்பாவி இளைஞரை 3 மணி நேரம் கட்டி வைத்து அடித்த காட்சிகள் பார்ப்பவர்களை நெஞ்சம் கலங்க வைத்துள்ளது.
ஐயப்பன் என்பவர் வெகுளியானவர் என்றும் அவரது செல்போனை வேறொருவர் பயன்படுத்தி ஆகாஷ் என்பவரிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஐயப்பனை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற ஆகாஷ் போதையில் 3 மணி நேரம் கட்டி வைத்து அடித்துள்ளார்.
படுகாயம் அடைந்த ஐயப்பனின் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அந்த காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





