சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 6 ஆண்டுகள் 9 மாதங்களுக்கு சிறை..!
இங்கிலாந்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார வழக்கில் 20 வயதான இந்திய பொறியியல் மாணவருக்கு ஆறு ஆண்டுகள் ஒன்பது மாதங்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மது போதையில் நண்பர்களிடம் இருந்து விலகி மயக்க நிலையில் கடந்த இளம் பெண்ணை இந்திய மாணவர் தோளில் தூக்கி சென்று தனது அறையில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறும் போலீசார் அதற்கான கண்காணிப்பு கேமரா ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்திய மாணவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





