போலி நகைகளை அடமானம் வைக்க முயன்ற மூவர் கைது..!
அரியலூர் அருகே போலி கொலுசை அடமானம் வைத்து பணம் பறிக்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஜெயகொண்டத்தில் பேருந்து நிலையப் பகுதியில் வட்டிக்கடை நடத்தி வருபவர் அணில்.
இவரது கடையில் பெரம்பலூரை சேர்ந்த துறை என்பவர் அடிக்கடி பொருட்களை அடமானமாக வைத்து பணம் பெற்று செல்வார். இந்நிலையில் மூன்று பேரும் சேர்ந்து நான்கு ஜோடி கொலுசுகளை வெள்ளி கொலுசு என கூறி அடமானம் வைத்து பணம் கேட்டுள்ளனர்.
சோதனை செய்து பார்த்த பொழுது அது வெள்ளி கொலுசு இல்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





