--- --:--:-- --

வெந்நீர் பாத்திரத்திற்குள் விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை..!

5

கடலூர் அருகே வெந்நீருக்குள் கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிதிராவிட நல்லூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கவின்.

 

வீட்டு பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த பொழுது கவினை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் பானையில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்த கவின் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்தார்.

 

அப்பொழுது வெந்நீர் பானை ஆனது கவிழ்ந்து தலையில் வெந்நீர் ஊற்றியது. இதில் ஒன்றரை வயது குழந்தைக்கு உடல் முழுவதும் வெந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon