--- --:--:-- --

விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்.. எதுவும் இல்லை எனக் கூறி அனுப்பிய மருத்துவர்கள்.. மரணம்..!

7

புதுச்சேரியில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த வழக்கறிஞருக்கு ஒன்றுமில்லை எனக்கூறி அரசு மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பிய நிலையில் வீட்டிற்கு சென்று அரை மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள காமராஜர் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதற்கு ஆறில் பயணம் சேர்ந்த வழக்கறிஞர் மயக்க நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அக்ஷய்க்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து ஏற்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கட்சி தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon