--- --:--:-- --

இந்தியா முழுவதையும் சூழ்ந்த மேகம்.. பதற வைக்கும் புகைப்படம்..!

4

தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ் பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. அதற்கு பிபர்ஜாய் என பெயரிடப்பட்டது. வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11ஆம் தேதி வலுவடைந்தது.

 

குஜராத் கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சும் முதல் இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவரான சுல்தானும் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon