--- --:--:-- --

இறந்தது போல் பிராங்க் செய்த நபர்.. நடந்தது என்ன..?

5

பெல்ஜியம் நாட்டில் ஒருவரின் இறுதி சடங்கிற்காக அவரது நண்பர்களும், உறவினர்களும் கூடியிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக நடந்த விஷயம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பெல்ஜியம் நாட்டவர் டிக் டாக் பிரபலம் சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் தனது தந்தையின் இறப்புச் செய்தியை வெளியிட்டிருந்ததுடன் தனது துக்கத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார். அவருடைய இறுதி சடங்குக்கான தேதியும் வெளியிடப்பட்டது.

 

இது குறித்து தெரிய அவரது உறவினர்களும், நண்பர்களும் இறுதி சடங்கு நிகழ்வுகளுக்காக காத்திருந்தனர். கருப்பு நிற கார் என்று அவரது உடல் வருகைக்கு பதிலாக ஹெலிகாப்டர் ஒன்று வந்து இறங்கியுள்ளது. எல்லோரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளனர்.

 

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியுள்ளார். பின்னர் தான் தெரிந்தது அது அவரும் அவரது மனைவி பிள்ளைகளும் திட்டமிட்ட பிராங்க் என்பது. பலர் இது கொடுமையான பிராங்க் என விமர்சிக்க அவரோ என் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் என்னை மறந்து விட்டார்கள்.

 

இறுதி சடங்கு என்றதும் எல்லோரும் வந்து விட்டார்கள். அதனால் நான் உயிரோடு இருக்கும்போது பார்க்கலாம் என்று நினைத்து இதை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon