--- --:--:-- --

கணவனை போட்டு தள்ள மனைவி போட்ட சதி திட்டம்..!

5

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஆண் நண்பருடன் இணைந்து கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த சம்பவத்தில் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவுண்டம்பட்டியை சேர்ந்த அழகு சுந்தர பாண்டி – புனிதா என்ற ஜோடி காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

 

கடந்த 8ம் தேதி என்று பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த சுந்தரபாண்டியை பைக்கில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர் ஒரு கட்டத்தில் துரத்தி சென்று அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

 

நெஞ்சு பகுதியில் லேசான வெட்டு காயத்துடன் உயிர் தப்பிய சுந்தரபாண்டியன் புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் விசாரித்தனர்.

 

அப்பொழுது ஆண் நண்பர் மாரி ராஜ் என்பவர் உடன் சேர்ந்து சுந்தரபாண்டியின் மனைவி கணவனை கொலை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததை எடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கொலை முயற்சிக்கு உடமையாக இருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

 

Right Menu Icon