ராஜீவ் காந்தி நினைவிடம் முன்பு மர்ம சூட்கேஸ்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவிடம் முன்பு மர்ம நபர்கள் சூட்கேசுடன் வீசிச் சென்ற நிலையில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக அமைந்திருக்கிறது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம். இந்த நினைவிடத்தில் 24 மணி நேரமும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வழியாக வேலூர் நோக்கி சென்று ஒரு வாகனத்திலிருந்து சூட்கேஸ் அருகே சென்று சோதனை கருவி மூலமாக சோதனை செய்த பொழுது அதிலிருந்து ஒலி எழும்பியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த துணை ராணுவத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.






