--- --:--:-- --

சாலையில் தடுமாறி விழுந்த முதியவர்.. நூலிழையில் சடன் பிரேக் போட்ட பேருந்து ஓட்டுனர்..!

5

சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுகிறார். அப்பொழுது எதிர் திசையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு சடன் பிரேக் அடித்து பேருந்தை திருப்பியதால் முதியவர் தப்பித்து விட்டார்.

 

இதையடுத்து முதியவரை லேசான காயத்துடன் பத்திரமாக மீட்டனர். விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பிக்கும் இந்த விபத்து காட்சிகள் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிகழ்ந்துள்ளது.

 

நேற்று அதே பகுதியில் இரு மாணவிகள் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் இன்றும் அதே இடத்தில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon