இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பாடத்தில் புதிய மாற்றம்..!
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டு கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது. சீட்டு கட்டு தொடர்பான விளையாட்டு பாட புத்தகத்தில் இடம் பெறுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால் நீக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இருந்து கேட்கப்படும் ஐந்து கேள்விகளுக்கு பதிலாக புதிதாக இரண்டு கேள்விகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆறாம் வகுப்பு பாட புத்தகத்திலிருந்து ஆன்லைன் ரம்மி என்ற பகுதி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





