11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
டெல்டா மாவட்டமான தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





