ஆசிரியர் வீட்டில் எடுக்க எடுக்க வந்த பாம்பு..!
ஓசூர் அருகே ஆசிரியர் வீட்டின் சுற்றுப்புற சுவற்றில் இருந்த நாகப்பாம்பை 22 குட்டிகளையும் பாம்பு பிடி வீரர் பத்திரமாக மீட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டின் சுற்றுப்புற சுவற்றில் உள்ள துளை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு பாம்பு பிடி வீரர்களுடன் வந்த வனத்துறையினர் அந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.
மேலும் அந்த துறையில் 22 பாம்பு குட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அந்த பாம்பு குட்டிகளை வனத்துறையினர் வெளியே வர செய்து லாவகமாக பிடித்தனர். அதில் ஒரு பாம்பு குட்டி ஒருவரை கடித்துள்ளது.
இதில் மயக்கமடைந்தவரை வனத்துறையினர் மீது தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நாகப் பாம்பு மற்றும் பாம்பு குட்டிகள் வனப்பகுதியில் விடப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





