ஸ்டேடியத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்து கால்பந்து ரசிகர் பலி..!
அர்ஜென்டினாவில் விளையாட்டு மைதானத்தில் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கால்பந்து ரசிகரால் விளையாட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டது.
53 வயதான ரசிகர் மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யாரும் தள்ளி விட்டதற்கான அறிகுறிகள் இல்லை.
இதனையடுத்து நடந்து கொண்டிருந்த கால்பந்து போட்டி இடைநிறுத்தப்பட்டு உடனடியாக ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





