பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் தாய் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு..!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பல் மருத்துவர் அளித்த சிகிச்சையால் பெண் உயிரிழந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என விசாரணை நடத்திய மாவட்ட மருத்துவர் இணை இயக்குனர் அறிக்கை அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த இம்ரான் என்பவர் பல் மருத்துவ சிகிச்சைக்காக தனியார் பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல் மருத்துவர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து இந்திராணிக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனிடையே தவறான சிகிச்சையால் தான் தாய் இறந்ததாக பல் மருத்துவர் மீது அவரது மகன் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் பத்து 10 பேர் உயிரிழந்ததாக கூறி பத்து பேரின் பெயர் பட்டியலை மர்ம நபர் மருத்துவமனையில் போட்டு சென்றனர்.
இந்த புகார் குறித்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளார். ஆனால் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறப்படுவது மருத்துவ அறிக்கையில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.






