அவசர அவசரமாக ஒடிசா செல்லும் உதயநிதி ஸ்டாலின்..!
ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 280 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியானதாக வருவாய் துறை செயலாளர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், போக்குவரத்து துறை அமைச்சரும் ஒடிசா செல்வதாக தகவல் வெளியிட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் ஒடிசா முதலமைச்சர் உடன் பேசி உள்ளார் எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






