பைக் மீது கார் மோதி கோர விபத்து..!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். கணபதி பாளையத்தை சேர்ந்த வித்தியாசரி என்ற மாணவி கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அந்த வழியாக சென்ற ஆடி கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் தந்தை நான்கு மாதங்களுக்கு முன்பு தான் இறந்தது குறிப்பிடத்தக்கது.






