பீட்டர் பால் என் கணவரே இல்லை : வனிதா விஜயகுமார்
சமீபத்தில் மரணம் அடைந்த பீட்டர் பால் தன் கணவரே இல்லை என்று நடிகை வனிதா விஜயகுமார் அறிக்கை வழியாக தெரிவித்துள்ளார். வனிதா விஜயகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைப்பற்றி சொல்லலாமா வேண்டாமா என்பதை யோசித்து நீண்ட பொறுமைக்கு பின் சொல்கிறேன்.
மறைந்த பீட்டர் பாலை நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு நாங்கள் ஒன்றாக இருந்தோம். அதே ஆண்டில் எங்களின் உறவு முடிவடைந்துவிட்டது. நான் பீட்டர் பாலின் மனைவியும் இல்லை.
அவர் என் கணவரும் இல்லை. என் கணவர் இறந்ததாக செய்தி பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





