புதிதாக பிறந்த குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்பு.. ஆனால் ஆசனவாயே இல்லை..!
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. இதில் ஷாக் என்னவென்றால் அந்த குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்பு இருந்துள்ளது. அதேநேரம் அந்த குழந்தைக்கு ஆசனவாய் இல்லையாம், இந்த குழந்தை குறித்த தகவல்கள் சர்ஜரி கேஸ் ரிப்போர்ட்ஸ் இன்டர்நேஷனல் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ ரீதியாக அரிய வழக்குகளில் ஒன்றான இது 60 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுமாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது சிக்கலான சிறுநீரகம், இரைப்பை குடல் அல்லது அனோரெக்டல் குறைபாடுகளுடன் தொடர்புடையது என்றும் கூறியுள்ளனர்.
அந்த குழந்தைக்கு இரண்டு ஆணுறுப்பு இருந்த நிலையில், அதில் ஒன்று மற்றொன்றை விடச் சற்று பெரியதாக இருந்தது என்றும் குழந்தை ஏன் இப்படி இருந்தது என மருத்துவர்களுக்கே முதலில் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
மருத்துவர் கூறுகையில், “இரட்டை ஆணுறுப்பு என்பது இரட்டை சிறுநீர் பாதை, சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை மற்றும் செரிமான அமைப்பு என முரண்பாடுகளுடன் இணைந்தே வருகிறது. இது இரட்டை மற்றும் விரிந்த பெருங்குடலுடன் தொடர்புடையது என்பதால், அதை அகற்ற வேண்டும். பெற்றோர்களுக்கு இவை அச்சத்தை ஏற்படுத்தும் என்றாலும் கூட குழந்தையால் சிறுநீர் கழிக்க முடிந்தால் இது ஒன்றும் ஆபத்தானது இல்லை என தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




