--- --:--:-- --

பெண்களுக்கு மாதம் ரூ.2000..தேர்தல் அறிக்கையில் அதிரடி அறிவிப்பு

2

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

 

அதில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏராளமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

 

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ3,000 நிதி உதவி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon