சென்னை விமான நிலையத்தில் குழாயில் பாம்பை கடத்தி செல்ல முயன்ற பெண்..!
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஆசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அங்கு வந்த பயணிகளை சென்னை விமான நிலையத்தை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்பொழுது சென்னையை சேர்ந்த பெண் பயணி ஒருவர் மீது சுங்கத்துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அந்த பயணியின் லக்கேஜ்களை சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பெண் பயணி இரும்பு பிளாஸ்டிக் குவளைகளை கையில் வைத்திருந்தார்.
அது என்னவென கேட்ட பொழுது எதையோ சொல்லி அனுப்பினார். உடனே சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த குழாய்களை சோதனையிட்டனர் அப்பொழுது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இரு குழாய்களிலும் சிறிது முதல் பெரிது வரை 23 பாம்புகள் இருந்துள்ளது.
இதைக் கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை வைத்து அவரிடம் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்து அதிகாரிகளை அவரை தனி அறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





