--- --:--:-- --

அண்ணாமலை வரும் 26 ஆம் தேதி குஜராத் பயணம்..!

6

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 26 ஆம் தேதி பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குஜராத் செல்ல உள்ளார். குஜராத்தில் தமிழ்நாடு சௌராஷ்டிரா இடையேயான இணைப்பை இந்த தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் வரும் 17ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலின் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஆளுநர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

 

இந்த நிகழ்வில் பங்கேற்க அண்ணாமலை வரும் 26 ஆம் தேதி நடைபெறும் சௌராஷ்டிரா தமிழ் சங்கம் விழாவில் இறுதி நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon