தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





