விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்..!
சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா விமானத்தில் பயணித்தவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து மலேசியா புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று இரவு சென்னை வான் வெளியில் கடந்து சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மலேசிய நாட்டை சேர்ந்த நபருக்கு திடீரென்று கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து விமானம் நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் சென்னை விமான நிலைய காவல்துறையினர் மலேசிய பயணி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





