பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!
ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்கா திட்டத்தினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
பூங்கா அமைய உள்ள இடத்தில் 152 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிப்காட் நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்திட தயாராக உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





