ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் தகனம்..!
அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் ஊராட்சியை சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இறுதி சடங்குகள் நடைபெற்றன. பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ அதிகாரிகள் மரியாதையுடன் ராணுவ ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





