--- --:--:-- --

காவலரை கொடுவாளால் தாக்கிய ரவுடியை சுட்டுப்பிடித்த காவல் ஆய்வாளர்..!

2

திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய நபரை பிடித்து சென்ற உதவி காவல் ஆய்வாளரை கொடுவாளால் வெட்டிவிட்டு தப்பிய குற்றவாளியை காவல் ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.

 

ராஜகோபால் என்பவரின் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் தஞ்சை மாவட்டத்தில் பதுங்கி இருந்துள்ளார். அவனை கைது செய்ய முயன்ற தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனை வெட்டியுள்ளார்.

 

இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் தனது கை துப்பாக்கியால் பிரவீனை சுட்டுப் பிடித்தார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் பிடிபட்ட குற்றவாளி இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon