நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி..!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி.ஒருவர் சக எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது. விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்பி நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தனது காதலியான சக நாடாளுமன்ற உறுப்பினரை பார்த்து திருமணம் செய்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். தற்பொழுது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும் இரவில் அதனை தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை பார்த்து அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி ஆர்ப்பரித்தனர். அவரது காதலை அந்த பெண் ஏற்றுக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





