திடீரென இரண்டாகப் பிளந்த ஆற்றுப்பாலம்..!
காஞ்சிபுரம் ஆற்றுப்பாலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பாலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்பொழுது பாலத்தில் இரு சக்கர வாகனத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஏற்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






