பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் விடுதலை..!
பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் முகமது என்பவர் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போலீஸ் அழைப்பு எண் தொலைபேசி 100ஐ அழைத்து பிரதமர் பற்றி அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆனது.
இந்த வழக்கை டெல்லி மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்து விசாரணை முடிவில் முகமது கொலை மிரட்டல் விடுத்ததாக எந்த ஆதாரத்தையும் காட்ட முடியாமல் போலிஸ் தரப்பு தவறிவிட்டது என்று கூறிய மாஜிஸ்திரேட் நீதிபதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





