--- --:--:-- --

வேலைக்கு போனால் தான் செல்போன் என அம்மா கூறியதால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

10

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செல்போன் தர மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிராமத்தை சேர்ந்த பிரபாவதியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூத்த மகள் ஜோதி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

 

கடந்த சில தினங்களாக ஜோதி வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததால் பிரபாவதி செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு வேலைக்கு சென்றால் தான் செல்போன் தருவேன் என மகளிடம் கூறியுள்ளார். இதனால் மணமடைந்த ஜோதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் ஜோதியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon