சாலையில் கால் துண்டாகி கிடந்த இளைஞர்..தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்..உதவிய காவல்துறை ஆய்வாளர்..!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தகோட்டை அருகே விபத்தில் கால் துண்டாகி சாலையில் கடந்த இளைஞரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மீது தனது வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
வண்ணார்பட்டியை சேர்ந்த முருகேசன் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது இதிலே வந்த மினிலாரி மோதி கால் துண்டாகி கீழே விழுந்தார். இதனை கண்டவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என கூறப்படுகிறது.
அந்த வழியாக வந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் உடனடியாக முருகேசனை தனது வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அழைத்து சென்றார்.





